Monday, January 3, 2011

Facebook – கிற்கு தடை

உலகப் புகழ்பெற்ற வோஸ்கஸ்வோகன் ( Volkswagen ) , ஹெயடல்பெர்க் சிமென்ட் (Heidelberg Cement) போன்ற மிக பெரிய ஜெர்மன் நிறுவனங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தானில் ஃபேஸ்புக்கிற்கு தடை விதிக்கப்பட்டது, முஸ்லிம்களை பற்றி அவதூறு பரப்பப்படுவதாகவும், முகமது நபியைப் பற்றி நாகரிகமற்ற முறையில் விமர்சிப்பதாகவும் கூறி பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்டு இருந்தது. இதற்கு உலகம் முழுவதும் விமர்சனங்கள் எழுந்ததன. ஆனால் இன்று நாகரிக நாடாகவும், முழு கல்வி அறிவு பெற்ற ஜனநாயக நாடாகவும் கருதப்படும் ஜெர்மனியில் உலக முழுவதும் வியாபாரம் பரப்பியுள்ள முன்னணி நிறுவனங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
இந்த நிறுவனங்களின் வியாபார கொள்கைகள், செயல்திட்ட அமைப்புகளை, இலாபம் ஈட்டும் நடைமுறைகளை உலகில் பல முன்னணி பல்கலைகழகங்கள், கல்லூரிகள் தங்கள் பாட திட்டத்தில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனியின் புகழ்பெற்ற பொருளாதார நாளேடான (Wirtschaftswoche) வெளியிட்டுள்ள செய்தியில் இந்த சமுக வலைதளங்கள் மூலம் ஜெர்மனிய நிறுவனங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக, அவற்றின் ரகசிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க

No comments:

Post a Comment