ஹிஜ்ரீ மாதங்களான 12 மாதங்களில் ஒன்று ஸஃபர் மாதமாகும். இது ஹிஜ்ரீயின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தை அடுத்து வரக்கூடியது.
ஸஃபர் என்றால் காலியாகுதல் என்று பொருள். ஸிஃபர் என்றால் ஒன்றும் இல்லாததற்கு சொல்லப்படும். எண்ணிக்கையில் ஒன்றும் இல்லாததற்கு பூஜியம் என்று தமிழில் கூறுவதுபோல ஆங்கிலத்தில் ஸைஃபர் என்றும் அரபியில் ஸிஃபர் என்றும் கூறுவர்.
ஸஃபர் மாதத்தில் மக்காவை விட்டு மக்காவாசிகள் அனைவரும் வெளியேறி பயணித்து விடுவதால் இப்பெயர் வந்ததாக சிலர் கூறுகின்றனர். முஹர்ரம் மாதம் போர் செய்ய தடுக்கப்பட்ட மாதமாக இருந்ததால் போர் செய்யாமல் இருந்து விட்டு அடுத்து வரக்கூடிய ஸஃபர் மாதத்தில் போருக்காகப் புறப்பட்டு ஊரில் ஒருவர் கூட இல்லாமல் ஊரை காலி செய்து விடுவதால் ஸஃபர் என்று பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஸஃபர் மாதம் சம்பந்தமாக நான்கு விஷயங்களை மையமாகக் கொண்டு நமது ஆய்வு அமைகிறது.
மேலும் படிக்க
No comments:
Post a Comment