17 -ஆண்டுகளாக ஆங்கிலேயரை குலை நடுங்க வைத்த திப்பு தன் 39-வது வயதிலேயே ஷஹீதாகி வீரமரணம் அடைந்தது ஒரு வரலாற்று சோகமாகும். காவிரியே கண்ணீர் சிந்தும் கனத்த நினைவுகளோடு திப்பு சுல்தானின் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் சுதந்திர எரிமலையின் தீ சுவாலைகள் மட்டும் அடங்கவில்லை.
ஹைதர் அலி, அவர் மகன் திப்பு சுல்தானை தொடர்ந்து திப்புவின் பிள்ளைகளும் குடும்ப வழியில் தாய்நாட்டிற்காக களம் புகுந்தனர்.
ஹைதர் என்றால் சிங்கம் என்று அர்த்தம். திப்பு என்றால் புலி என்று அர்த்தம். ஆம்! சிங்கமும், புலியும் பிறந்த பரம்பரையில் வந்தவர்கள் சீறுவதும், பாய்ந்து தாக்குவதும் இயல்புதானே!
நாடு கடத்தல்!
திப்பு கொல்லப்பட்ட பிறகு, அவரது பிள்ளைகள் மைசூரிலிருந்து வேலூருக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் அங்கேயே இருந்தால் பரம்பரை போர் தொடரும் என்று ஆங்கிலேயர்கள் அஞ்சினர். அதனால் வேலூர் கோட்டையில் அவர்கள் சிறை வைக்கப்பட்டனர். இக்கோட்டை கி.பி 1295-ல் கட்டப்பட்டது. திப்புவின் பிள்ளைகளை சிறை வைப்ப தாக இருந்தாலும் கூட கோட்டையில்தான் அவர்களை சிறையிட முடிந்தது! சிறை அவர்களுக்கு அரண் மனையாய் இருந்தது.
திப்புவின் ஆட்சிக்காலம் போரிலும், போருக்கு பிந்தைய நிவாரண பணிகளிலும், அடுத்த கட்ட போருக்கான ஆயத்தப் பணிகளிலுமே கழிந்தன. இடையிடையே தன் அருமை மனைவியோடு கழித்த பேரின்ப பொழுதுகளும் உண்டு. அதன் சாட்சியாக 12 ஆண் பிள்ளைகள், 8 பெண் பிள்ளைகள் அவரது வாரிசுகளாக வாழ்ந்தனர். இவர்களில் பலர் அரச வாழ்க்கையை துறந்து, அரசியல் கைதிகளாக வேலூரில் சிறையிடப்பட்டார்கள். திப்புவின் அமைச்சரவை சகாக்கள் 24 பேர், அவர்களை சார்ந்த அலுவலர்கள், உதவியாளர்கள், தளபதிகள், உறவினர்கள் என பெரும் கூட்டமே சிறைவைக்கப் பட்டது.
மேலும் படிக்க
No comments:
Post a Comment