நபி (ஸல்) அவர்களே நமக்கு அனைத்துத் துறைக்கும் முன்மாதிரி! நபித் தோழர்களுடன் துன்பத்திலும் துயரத்திலும் பங்கெடுத்ததைப் போன்று மகிழ்ச்சியிலும் இன்பத்திலும் இணைந்திருந்தார்கள். சிறுவர்களுடன் விளையாடினார்கள். மனைவியர்களுடன் ஓட்டப்பந்தயம் நடத்தினார்கள். பிறர் சிரிக்கும் அளவுக்கும் சிந்திக்கும் அளவிற்கும் உரையாடினார்கள். உண்மையான செய்திகளைக் கூறி கேலியும் செய்தார்கள்.
மகிழ்ச்சியாக இருப்பதையும் சிரிப்பதையும் விளையாடுவதையும் மார்க்கப் பற்றுக்கு முரணாக கருதும் சகோதரர்களும் நம்மிடையே உள்ளனர். சோகம் வடிந்த முகமும் அனைத்தையும் இழந்த தோற்றமும்தான் இறையச்சத்தின் அடையாளம் எனக் கருதுகிறார்கள்.
இஸ்லாத்தின் வரையறைகளை முழுமையாக அறியாதிருப்பதே இதன் காரணம் எனக் கூறலாம். இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கமாகும். இயற்கைகளில் சிறந்தவை அனைத்தையும் அது அனுமதிக்கிறது. அதிலும் குறிப்பாக மனித வாழ்வில் இன்பம் சேர்க்கும் அனைத்தையும் வரவேற்கிறது.
அல்லாஹ்வை மறக்கச் செய்யாத மகிழ்வுகள் என்றும் அல்லாஹ்வை மறக்கச் செய்வதிலும், அவனுக்கு மாறு செய்வதிலும் ஏற்படும் மகிழ்வுகள் என்றும் மார்க்கத்தில் இரண்டு வகையாக மகிழ்ச்சிகள் இருப்பதை அல்குர்ஆன் அடையாளம் காட்டுகிறது.
முதல் வகை மகிழ்ச்சியை மார்க்கம் அனுமதிப்பது மட்டுமின்றி அதை வரவேற்கவும் செய்கிறது. சில நேரங்களில் நல்லறங்களின் சன்மானமாகக் கூட மகிழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது.
மேலும் படிக்க
No comments:
Post a Comment