பிறை முடிவு ஆட்சியாளரைச் சார்ந்தது
நோன்பு மற்றும் பெருநாட்கள் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் தொடர்புடைய காரியமாக இருப்பதினால் அவைகளை தீர்மானிப்பது இஸ்லாமிய ஆட்சியாளரின் பொறுப்பாகும். இதனை தனிமனிதர்கள் தங்கள் கைகளில் எடுப்பது கூடாது. அவ்வாறு எடுத்தால் அது சமூகப் பிளவிற்கும் பிரச்சனைக்கும் காரணமாகிவிடும்.
தமிழக முஸ்லிம் இது விஷயத்தில் முஸ்லிம் சமுதாய ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு தலைமை காஜியை சார்ந்திருக்க வேண்டும். பிறையை தீர்மானிப்பதில் அவர் தவறிழைத்தால் அதற்கான தண்டனையை அவர் அனுபவிப்பார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீதிபதிகள் மூன்று பிரிவினர்களாவர். அதில் இருவர் நரகம் செல்வார்கள். ஒருவர் சொர்க்கம் செல்வார். முறை யான கல்வியின்றியோ அல்லது கல்வியிருந்தும் வேண்டு மென்றே அதற்கு மாற்றமாகவோ தீர்ப்பளித்த இருவரும் நரகம் செல்வார்கள். கல்வியுடன் முறையாக தீர்ப்பளித்தவர்தான் சொர்க்கம் செல்வார்.
தலைமை நிர்வாகியாக ஒரு அபீசீனிய அடிமை இருந்தாலும் அவருக்கும் கட்டுப்பட வேண்டும் என்று மார்க்கம் கூறுகிறது.
இமாம் உளு இல்லாமல் தொழுகை நடத்தினால் அவர் பின்னால் தொழுபவரின் தொழுகைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அது இமாமின் குற்றமாகத்தான் அமையும்.
எனவே அவர் தவறான முடிவெடுத்தாலும் அது சமுதாயப் பொதுமக்களை ஒருபோதும் பாதிக்காது.
மேலும் படிக்க
No comments:
Post a Comment