மூன்று விஷயங்கள் எவரிடம் உள்ளதோ அவர் ஈமானின் சுவையை பெற்றுக் கொண்டார்.
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏனைய அனைவரைவிடவும் அவருக்கு விருப்பத்திற்குரியவர்களாக இருக்க வேண்டும்.
ஒரு மனிதனை அல்லாஹ்வுக்காக நேசிக்க வேண்டும்
நெருப்பில் வீசப்படுவதை ஒருவன் எப்படி வெறுப்பானோ அதே போன்று குஃப்ர் (இறை மறுப்புக்கு) திரும்புவதை அவன் வெறுக்கவேண்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
இம்மூன்று பண்புகளும் ஈமானியப் பண்புகளில் மிக உயர்ந்தவையாகும் அவற்றைப் பூரணப்படுத்துபவர் ஈமானின் இனிமையையும் சுவையையும் பெற்றுக் கொள்வார்.
உணவும் பானமும் நாவினால் சுவைக்கப் படுவது போன்று உள்ளத்தினால் சுவைக்கத் தக்க இனிமை ஈமானுக்கு உண்டு. உடலுக்கு உணவைப் போன்று ஈமான் உள்ளத்திற்கு உணவாக உள்ளது. உடல்ஆரோக்கியமாக இருந்தாலே அது உணவின் சுவையை அனுபவிக்கும். நோயுடன் சுவையை அனுபவிக்க முடியாது.
மேலும் படிக்க
No comments:
Post a Comment