சென்ற இதழின் தொடர்ச்சி…
சாதாரண நாயைக்கண்டால் பேயைக்கண்டால் பயப்படும் வியாதினயப்போல் இஸ்லாம்போபியாவை அவ்வளவு சாதாரணமாக எடை போட முடியாது. உலக நாடுகளை குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட ஆதிக்க சக்திகளை அது படுத்தி எடுத்திருக்கிறது.
ஜெர்மனி
ஜெர்மனியும் இஸ்லாம் ஃபோபியாவெனும் மட சிந்தனையில் இருந்து தப்பவில்லை . மேற்கு ஐரோப்பா பரப்பில் மிக விழிப்புணர்வு நிரம்பிய நாடாக அறியப்பட்ட ஜெர்மனியிலும் வெறுப்புணர்வு வெறியாய் ஆடியதன் விளைவு மர்வா செர்பினி என்ற இளம் தாயின் உயிரை குடித்தது கடந்த ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி இந்த இதயத்தை ரத்தம் வழியச்செய்யும் நிகழ்வு நடைபெற்றது.ஹிஜாப் அணியும் உரிமைக்காக தனது உயிரை அந்த இளம் பெண் தியாகம் செய்யவேண்டியதாயிற்று.
நைஜீரியா
ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள எண்ணெய் வள நாடான நைஜீரியாவிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு ஓங்கி வளர்ந்தன. 2004 ஆம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி எல்வா எனுமிடத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கருவருக்கப்பட்டனர்.இதனை அங்குள்ள கிறிஸ்துவ பயங்கரவாத இயக்கம் செய்து முடித்தது.அது மட்டும் இன்றி பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் அந்த பிராந்தியத்தில் இருந்து விரட்டப்பட்டனர்.
மேலும் படிக்க
No comments:
Post a Comment