Monday, January 3, 2011

நேரத்தை முறைப் படுத்துவோம்

நம்ம நேரத்தை நன்றாக திட்டமிட்டு செலவு செய்ய, அப்படிச்செய்தபின் அதற்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கும் 10 முத்தான, அதேசமயம் மிகவும் சுலபமான (?) வழிகளை பின்வரும் பட்டியலில் பார்ப்போம்..
ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதை நிறுத்துங்கள் (Stop multi tasking) சமீபகாலங்களில், பொதுவாக பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது. அடிப்படையில், அறிவியல்ரீதியாக பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு தாவுவது/மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது என்பது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது!
முக்கியத்துவம் வாய்ந்த செயல்களை தேர்வு செய்து கொள்ளுங்கள் (Set your Priorities) ஒவ்வொரு நாளுக்குமான தலையாய செயல்களை மனதில் பதிவு செய்துகொள்ளுங்கள். உங்கள் தேர்வுகளின் முக்கியத்துவங்கள் மாற்றியமைக்கப்பட்டால் பொறுத்துக் கொள்ளுங்கள். உதார ணமாக, தீப்பற்றிக் கொண்ட ஒரு கட்டிடத்தை விட்டு வெளியேறுவதைவிட பணியிடத்தில் ஒரு விண்ணப்பத்தை எழுதி முடிக்கவேண்டுமென்பது முக்கியமானதல்ல!
மேலும் படிக்க

No comments:

Post a Comment