Monday, January 3, 2011

கண்ணீர் தேசம்… காஷ்மீரின் வரலாறு

வெண்பனியால் சிரிக்கும் மலை முகடுக ளும், பசுமை போர்த்திய பள்ளத்தாக்குகளும், சிலிர்க்க வைக்கும் குளிரும், மனதைப் பறிக்கும் ஆப்பிள் தோட்டங்களும், கவலைப்படாமல் ஓடிக் கொண்டிருக்கும் இமய மலையின் நதிகளும் அழகிய காஷ்மீரின் அடையாளங்கள்.
இறைவனால் அன்பளிப்பு செய்யப்பட்ட மண் ணில், எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் ஒவ்வொரு காஷ்மீரியின் உள்ளத்திலும் இருக்கிறது. அழகான காஷ்மீரில் அமைதியில்லை. மகிழ்ச்சியில்லை. இப்படி நிறைய ‘இல்லை’கள்!
எங்களுக்குத் தேவை ஒன்றுபட்ட ஒரே காஷ்மீர்! எங்களை நாங்களே ஆளும் உரிமை! இதுதான் பெரும்பாலான காஷ்மீரிகளின் மனநிலை என்பது கருத்துக் கணிப்புகள் கூறும் உண்மைகளாகும்.
காஷ்மீரின் உண்மையான வரலாறு என்ன? அது தமிழ்நாடு உ.பி., மஹாராஷ்டிரா, வங்காளம் போன்று இந்தியாவின் ஒன்றுபட்ட பகுதியா? அல்லது இந்தியா வுடன் இணைக்கப்பட்ட பகுதியா? இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கான விடைகள் பகிரங்கமாக உண்மை யின் வெளிச்சத்தில் நடுநிலையோடு விவாதிக்கப்பட வேண்டும் என்பதுதான் மனித உரிமை ஆர்வலர் களின் விருப்பமாகும்.
மேலும் படிக்க

No comments:

Post a Comment