Monday, January 3, 2011

ஹிஜாப்

மேலும் (நபியே) மூமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களை பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். தங்களின் அலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடிய (முன்கை&முகத்)தைத் தவிர வேறு எதையும் வெளிக்காட்டலாகாது. இன்னும் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.
(அல்குர்ஆன் 24:31)
இஸ்லாம் பற்றி விளங்காதோர், இஸ்லாமிற்கு எதிராக சிந்திப்போர் வைக்கும் பல விமர்சனங்களில் ஒன்றுதான் ஹிஜாபும்.
‘ஹிஜாப்’ என்றால் மறைத்தல், தடுத்தல் என்று பொருள்படும். ஆணோ, பெண்ணோ தங்களிடம் ஒழுக்கமின்மை செயல் வந்துவிடாமல் அல்லது வெளிப்படுத்தாமல் நடந்துகொள்ளும் முறைக்கு ‘ஹிஜாப்’ எனப்படும்.
பெண்கள் தங்களின் முழு உடலை மறைக்க வேண் டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இப்படிக் கூறுவதைத் தான் இஸ்லாமிய எதிரிகள் விமர்சனம் செய்கின்றனர்.
மேலும் படிக்க

No comments:

Post a Comment