Monday, January 3, 2011

அரஃபா பேருரையும், மனித உரிமைப் பிரகடனமும்!

அன்றைய அரபுலகில் உ ய ர் கு ல மா க போ ற் ற ப் ப ட் டு வ ந் த குரைஷிப் பரம்பரையில் அப்துல்லாஹ், ஆமினா என்ற தம்பதிகளுக்கு கி.பி. 571ல் மக்கா நகரில் பிறந்தார்கள் முஹம்மது (ஸல்) அவர்கள். சி று வ ய திலேயே பெற்றோரை இழந்து, அநாதையான இவர்களை சிறிய தந்தை அபூதாலிப் என்பவர் பொறுப்பேற்று வளர்த்தார்கள்.
நற்பண்புள்ளவர்களாக வளர்ந்து வந்த அவர்கள் நம்பிக்கையாளர், உண்மையாளர் என சிறப்புப் பெயர் கொண்டு மக்காவாசிகளால் அழைக்கப்பட்டார்கள். பல கடவுள் கொள்கை, பெண் சிசுக் கொலை, மது, மாது, சூது, நிற, இன, கோத்திர வெறி, தேசியவாதம், சாதியம், அதனால் தொடர் சண்டைகள் போன்ற தீமைகளுக்கு அடிமைகளாகவும் சகோதர வாஞ்சையற்ற எதிரிகளாகவும் வாழ்ந்து வந்த அவர்களுக்கு முஹம்மது (ஸல்) அவர்களின் நபித்துவ வருகை மகத்தான விடியலாய் அமைந்தது.
மக்காவில் 13 ஆண்டுகளாக கடும் எதிர்ப்புக்கும் தொல்லைகளுக்கும் மத்தியில் சீர்திருத்தக் கொள்கையை நிலைநாட்டிய முஹம்மது (ஸல்) அவர்கள் அங்கிருந்து சுமார் 450 கி.மீ தொலைவில் உள்ள மதீனாவில் முஸ்லிம்களை குடியமர்த்தினார்கள். தானும் குடியேறி, அங்கே இஸ்லாமிய ஆட்சியை நிறுவினார்கள். ஆரம்பத்தில் அவர்களை எதிர்த்த மக்களில் பல்லாயிரக்கணக்கானோர் இஸ்லாமிய ஆட்சியின் நன்னெறி கண்டு இஸ்லாத்தைத் தழுவலாயினர்.
மேலும் படிக்க

No comments:

Post a Comment