Monday, January 3, 2011

பாபரி பள்ளிவாசல் தீர்ப்பு வரலாற்றை சிதைத்துள்ளது

பாபரி மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு வழங்கியுள்ள தீர்ப்பை ஒரு அரசியல் தீர்ப்பு என்றே கருதவேண்டும். இத்தகைய தீர்ப்பை வழங்குவதற்கு நீதிமன்றம் தேவையில்லை. அரசே இப்படிப்பட்ட ஒரு முடிவை நீண்ட நாட்களுக்கு முன்பே எடுத்திருக்க இயலும்.
இடிக்கப்பட்ட பள்ளிவாசல் இருந்த இடத்தை கையகப்படுத்தி அங்கு ஒரு புதிய கோயிலை கட்டுவது தான் இந்த தீர்ப்பின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. பாபரி மஸ்ஜித் பிரச்சனையில் அரசி யல் மட்டுமின்றி வரலாறு ஒரு முக்கிய அம்சமாக அமைந்தது. ஆனால் இந்த தீர்ப்பில் வரலாற்று உண்மைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் ஸ்ரீராமர் பிறந்தார் என்றும் அவரது பிறப்பை நினைவு கூறும் வகையில் அங்கு கோயில் கட்டப்பட வேண்டும் என்றும் இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மத நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற ராம பக்தர்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த மதநம்பிக்கைக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லாத நிலையில் ஒரு நீதிமன்றத்தில் இத்தகைய தீர்ப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை.
மேலும் படிக்க

No comments:

Post a Comment