Monday, January 3, 2011

வரலாற்றை கொன்றது புராணம்

செப். 30 அன்று மாலை 3.30 மணிக்கு 60 ஆண்டுகாலமாய் எதிர்பார்த்த தீர்ப்பு வரவிருக்கிறது என்ற பரபரப்பு நாட்டையே கட்டிப் போட்டது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மட்டுமல்ல… அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களும் உலக நாடுகளின் அரசுகளும் எதிர்பார்த்திருந்தார்கள். இந்திய சாலைகள் அலஹாபாத்தை நோக்கி இருந்தது என்றால் அது மிகையில்லை…காரணம், உலகிலேயே ஜனநாயகத்திலும், சிறுபான்மை உரிமைகளை மதிப்பதிலும் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளை விட இந்தியா சிறந்தது என்ற நம்பிக்கைதான்.
ஆனால், அது நம்பிக்கை அல்ல. மாயை என்று அடுத்த ஒரு மணி நேரத்தில் தெரிந்தது.
இந்துத்துவ தரப்பை சேர்ந்த வழக்கறிஞர்கள் இரட்டை விரல்களை உயர்த்திக் கொண்டே, அலஹாபாத் நீதிமன்றத்தின் வாசல்களைதாண்டி, பலத்த பாதுகாப்போடு வெளியே வந்தனர்.
அப்போது பலரின் உள்ளங்கள் பதறின. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ராமர் அங்குதான் பிறந்தார் என்றும், அந்த இடம் மூன்றாகப் பிரிக்கப்படும்என்றும் தீர்ப்பு குறித்து அவர்கள் கூறியபோது, பாபர் மஸ்ஜித் இரண்டாம் முறையாக ஷஹீதாக்கப்பட்டது போல் இருந்தது. காந்தியடிகள் மூன்றாவது முறையாக சுட்டுக் கொல்லப்பட்டது போல் அதிர்ந்தது இந்தியா!
மேலும் படிக்க

No comments:

Post a Comment