1. நிச்சயமாக மனிதனை களி மண்ணின் மூலத்திலிருந்து நாம் படைத்தோம். பின்னர் பாதுகாப்பான ஓரிடத்தில், அவனை விந்தாக நாம் ஆக்கினோம்.
2. பின்னர், இந்த இந்திரியத்தை அலக்காக படைத்தோம்
3. பின்னர், அந்த அலக்கை தசைத் துண்டாகப் படைத்தோம்.
4. பின்னர், அந்தச் தசைத் துண்டை எலும்புகளாகப் படைத்தோம்.
5. பின்னர், அவ்வெலும்புகளுக்கு சதையை அணிவித்தோம்.
6. பின்னர், அவனை வேறொரு படைப் பாக (முழு மனிதாக) உண்டாக்கினோம்…..
(அல்குர்ஆன் 23:12&14)
ஆண் உயிரணுவும், பெண் சினை முட்டையும் சேர்ந்து ‘ஸைகோட்’ எனும் புதிய செல் உருவாகிறது. மனித கருவின் ஆரம்பம் இந்த ஸைகோட்டில் இருந்து தான் தொடங்குகிறது. ‘கலப்பு இந்திரியத் திலிருந்து நாம் மனிதனைப் படைத்தோம்’ என்று அல்குர்ஆன் 76:2ல் குறிப்பிடுவது இதனைத்தான்.
அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டு சுமார் 1300 ஆண்டுகளுக்குப் பிறகு கருவியலில் ‘கலப்பு இந்திரியம்’ என்ற கட்டம் இருப்பதாக ஹெர்ட்விக் என்பவரால் 1875ம் ஆண்டில்தான் கண்டுபிடிக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
No comments:
Post a Comment