பள்ளிவாசலுக்கு பெண்கள் வரலாமா? கூடாதா? என்பது ஏதோ மார்க்க சட்டத்தோடு மட்டும் சம்பந்தப்பட்ட தலைப்பல்ல! சமூகத்தின் மிக முக்கியமான ஒரு பாடம். பள்ளிவாசலுக்கு பெண்கள் வந்தே ஆகவேண்டும என்போர் முன்வைக்கின்ற காரணங்களையும் பள்ளிவாசலில் பெண்களை அனுமதிக்கவே மாட்டோம் என்போர் சுட்டுகின்ற வாதங்களையும் இந்தக் கட்டுரை அலசுகின்றது. கூடுமா? கூடாதா? என்னும் ரீதியில் சடங்குப் போக்கில் எப்பிரச்சனையையும் ஆராயாமல் அனைத்துக் கோணங்களையும் உள்ளடக்கி ரீஅத்தின் தீர்வை எட்டுவதற்கு இக்கட்டுரை பயனளிக்கும் என்று நம்புகிறோம்.
எதிர்பார்ப்புகளும், யாதார்த்தங்களும்
முஸ்லிம் பெண்களில் பலர் பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்வதை சர்வ சாதாரணமாக காண்கிறோம். குறிப்பாக, குழந்தைச் செல்வமற்ற பெண்கள் கோவில்-சர்ச் போன்ற பகுதிகளில் தொட்டில் கட்டித் தொங்க விடுவதை செய்திகள் மூலம் அறிகிறோம்.
இஸ்லாம் தடை செய்துள்ள வழிபாடுகளில் துவங்கி கோவில் வழிபாடு என்ற அளவுக்கு பெண்களின் நடவடிக்கைகள் மாறிவிட்டன. இறைவனுக்கு இணை வைக்கும் செயல்கள் அதிகம் இருப்பது ஆண்களிடமா? பெண்களிடமா? என பட்டிமன்றம் வைத்தால் “பெண்களிடம்தான்’ என தீர்ப்பு கூற வேண்டியிருக்கும்.
இணைவைத்தல் என்பதில் மட்டுமல்ல, குடும் பத்தில் குழப்பம், நிம்மதி இல்லா வாழ்க்கை, குழந்தை வளர்ப்பில் கோளாறு, உற்றார் உறவி னரை ஆதரிப்பதில் தடுமாற்றம் என பெண்கள் பெருந்தோல்வியில் சிக்கி உள்ளனர்.மேலும் படிக்க
No comments:
Post a Comment