Monday, January 3, 2011

இது நினைவூட்டும் நேரம்!

சுவர்க்க வாயில்கள் திறக்கப்பட்டு. நரக வாயில்கள் அடைக்கப்படும் புனித ரமளான் மாதம் நம்மை வந்தடைந்துவிட்டது. அளவில்லா நற்கூலியை அள்ளித் தரும் நல்லறங்களை கடைபிடிக்கவும், பாவமன்னிப்பைப் பெறவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் செயல்பட தயாராகி விட்டீர்களா? அப்படியானால் முதலில் ரமளான் மாத வணக்கங்களை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்! பிறகு அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்று திட்டமிடுங்கள்! கடந்த வருட ரமளானை எவ்வாறு கழித்தீர்கள் என்ற மீள்பார்வையும் மிக அவசியம்!
இன்று ஒரு நோன்பு முடிந்து விட்டது, இரண்டு நோன்புகள் முடிந்து விட்டன என்று பொதுக்கணக்குப் போடாமல், இன்றைய தினத்திற்கான இபாதத்களை முறையாக நிறைவேற்றியுள்ளேனா? என்று தினமும் சுயக் கணக்குப் பார்க்க வேண்டும்.
முஃமினின் ஒவ்வொரு நாளும் நன்மைகளை அதிகரிக்கவும் தீமைகளை விட்டுத் தவ்பாச் செய்யவும் பயன்பட வேண்டும் என்ற நபிமொழியை மறந்துவிடக் கூடாது.
மேலும் படிக்க

No comments:

Post a Comment