Monday, January 3, 2011

மருத்துவ துறையின் விபரீதங்கள்

கொடிய விச வாயு கசிந்து சுற்றுப்புற அப்பாவி மக்களை பலி கொண்ட வேளையிலும், அரசு மக்கள் நலனுக்கு சாதகமாகச் செயல்படாமல் அமெரிக்க தொழில் நிறுவனத்திற்கு சாதகமாகச் செயல்பட்டது எவ்வளவு அரக்கத்தனமான செயல். இந்தகிரிமினல் குற்றத்திற்குக் காரணமான யூனியன் கார்பைடு அதிகாரிகள், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் மீது கிரிமினல் குற்றத்தின் கீழ் தண்டிக்க ???? என்னதான் உள்ளது? யார்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்-? என்ற பல கேள்விகளுக்கு விடை காண வேண்டிய நேரம் இது!
போபால் விபத்தைத் தொடர்ந்து 1985ல் அரசால் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கண்ட றிய 20க்கும் மேற்பட்ட பல ஆய்வுகளை மேற் கொண்ட நிலையில் திடீரென காரணம் ஏதும் அறிவிக்கப்படாமல் அவ்வாராய்ச்சிகள் அனைத்தும் 1994ல் நிறுத்தப்பட்டது. இதை எதிர்த்து மருத்துவர்கள் பெருமளவு குரல் கொடுக்காதது (அரசின் பழி வாங்கும் போக்கின் பயத்தால்) வேதனையே.
மேலும் படிக்க

No comments:

Post a Comment