சரியாக இரண்டாண்டுகளுக்கு முன்னர் நாங்கள் காஷ்மீர் சென்றபோது ஓரளவு அங்கே அமைதி உருவாகியிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஷரீயத் அமைப்பு உள்ளிட்ட காஷ்மீர் இயக்கங்களிடையே ஒற்றுமை ஏற்பட்டிருந்தது. ஆஸாதி என்கிற கோரிக் கையை அவர்கள் விட்டுவிடவில்லையாயினும் ஆயுதப் போராட்டம் அங்கு ஓய்ந்திருந்தது. அமைதி வழிப் போராட்டம் முதலான சொல்லாடல்கள் யாசின் மாலிக் போன்றோரின் உதடுகளிலிருந்தும் உதிர்ந்தன. எனினும் இந்நிலையைத் தக்க வைக்கும் பொறுப்பு இந்திய அரசிடம் உள்ளது. இந்திய அரசோ அந்தப் பொறுப்பை உணர்ந்ததாகத் தெரியவில்லை. பிரிவினை கோருபவர்களுடன் தொடர்ந்த பேச்சு வார்த்தைகைள மேற்கொள்ளுதல் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள ஏழு லட்சம் இந்தியப் படையினரைக் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக் கொள்ளுதல், ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறுதல், மனித உரிமை மீறல்களை நிறுத்திக் கொள்வதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல், முறையான தேர்தல் மூலமான நல்லாட்சி வழங்குதல் முதலியவற்றின் ஊடாகவே அங்கு அமைதி தொடர முடியும் என்கிற எச்சரிக்கையோடு தான் காஷ்மீர்ப் பயணம்குறித்த எனது நு£லும் முடிந்தது.
ஆனால் இந்த இரண்டாண்டுகளில் என்ன நடந்தது- மேலே குறிப்பிட்ட எந்த அம்சத்திலும் இந்திய அரசு நீதியாய் நடந்து கொள்ளவில்லை. காஷ்மீர் இயக்கங்களின் கூட்டமைப்பின் அழைப்பை மீறி அங்கே மக்கள் வேறெப்போதைக் காட்டிலும் அதிகமாக வாக்களித்ததை இந்திய அரசு தவறாகப் புரிந்து கொண்டது. அன்றாடப் பிரச்சினைகளை எதிர் கொள்ள ஒரு நிர்வாகம் தேவை என்கிற அளவில் மட்டுமே மக்கள் தேர்தலில் பங்கேற்றனர். அதுவும் கூட ஸ்ரீநகர் முதலான பகுதிகளில் மிகக் குறைந்த வீதத்திலேயே வாக்குப் பதிவு நடந்தது என்பதை எல்லாம் இந்திய அரசு மறந்தது.
மேலும் படிக்க
No comments:
Post a Comment