போபால் விஷவாயுவினால் பாதிக்கப்பட்ட மக்களின் சோக வரலாற்றையும் அதற்கு காரணமாக இருக்கும் அரசு பயங்கரவாதத்தையும் இங்கே தோலுரித்துக் காட்டுகிறார் மருத்துவர் புகழேந்தி. கல்பாக்கம் பகுதியில் ஏழை எளிய மக்களிடையே மருத்துவச் சேவை செய்து வருபவர். தொழில் கூடங்களின் செயல்பாடு மக்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து பல்வேறு தளங்களில் போராடி வரும் போராளியாகவும் விளங்குகிறார் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் புகழேந்தி
1984ஆம் ஆண்டு டிசம்பர் 2,3 ஆகிய தேதிகளில் மெத்தில் ஐசோ சயனைடு (மிக்) எனும் கொடிய நச்சுத் தன்மையுள்ள வாயு, போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்தில் நடந்த விபத்தால் கசிந்து வெளியேறி உடனடியாக ஏறக்குறைய 5000 மக்கள் இறந்ததும் பின்னர் அந்த எண்ணிக்கை 20,000 ஆக உயர்ந்ததும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏறக்குறை 5 லட்சம் மக்களையும் தாண்டியது. இந்த விஷ வாயு பெரும்பாதிப்பு ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 85% முஸ்லிம்களாகும், இந்தவிபத்து தொடர் பாக அப்போது தொடரப்பட்ட வழக்கின் காரணமாக 26 வருடங்கள் கழித்து கடந்த 17&06&2010 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.மேலும் படிக்க
No comments:
Post a Comment