Monday, January 3, 2011

போபால் விபரீதமும் & சுற்றுச்சூழல் பாதுகாப்பும்

போபால் விஷ வாயு வழக்கில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நாட்டில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பலி வாங்கிய யூனியன் கார்பைட் நிறுவனத்தின் விஷவாயு ஒரு சாதாரண சாலை விபத்து வழக்குப் போல் கருதப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது நெஞ்சை உலுக்கும் கொடுஞ் செயலாக அமைந்துள்ளது. இனி ஒரு அணு உலையில் இருந்து கதீர்வீச்சு ஏற்பட்டு அதனால் மனிதர்கள் உயிர் இழந்தால் அதுவும் ஒரு சாலை விபத்துப் போல் கருதப்படும் நிலை இந்த தீர்ப்பினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு பெரும் ஆபத்தாக விளங்கும் இந்த பாதகச் செயல்கள் குறித்து நாம் பாராமுகமாக இருக்க இயலாது. நாம் வாழும் பூவுலகை காப்பாற்றுவது நமது இன்றியமையாத கடமையாகும். எனவே தான் பூவுலகின் சுற்றுச் சூழலை பாதுகாக்க ஏராளமான வழிகாட்டுதலை இஸ்லாம் வழங்கியுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை புறக்கணித்து வரம்பு மீறி வாழ்ந்தவர்களின் கதி என்னவானது என்பது குறித்தும் திருக்குர்ஆன் பின்வருமாறு எச்சரிக்கின்றது:
அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர். அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர். எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான். நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான். (89:-14)
மேலும் படிக்க

No comments:

Post a Comment