Monday, January 3, 2011

சமுதாய ஒற்றுமை குலைவு? திருவிடைச்சேரி? நேரடி கள ஆய்வு!

சமுதாய ஒற்றுமை குலைவுக்கு சன்மார்க்கமா காரணம்?
திருவிடைச்சேரியில் நடந்தது என்ன? நேரடி கள ஆய்வு
சமுதாயம் ஒற்றுமையாக வாழ்வதற்காக அல்லாஹ்வும், அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் நேரான வழியை காட்டி இருக்கின்றனர்.
அத்தகைய நேர்வழியின் பக்கம் மக்களை அழைக்கக் கூடிய அழைப்புப் பணியை (தஃவாவை) செய்வதற்கும், ஒரு அழகிய வழி முறை உண்டு.
‘நான் கடவுள்’ என்ற கொடுங்கோலன் ஃபிர்அவ்னிடம் அழைப்புப் பணி செய்ய மூஸா (அலை) அவர்களை அனுப்பிய இறைவன் அவனிடம் நளினமாகவே எடுத்துச் சொல்ல சொன்னான்.
(பார்க்க: அல்குர்ஆன் 20:44)
கொடுங்கோன்மையானவனிடமே நானே கடவுள் என்றவனிடமே நளினமாக எடுத்துச் சொல்ல வேண்டுமானால் சக முஸ்லிம் ஜமாஅத் மக்களிடம், இஸ்லாத்தை சரிவர முழுமையாக விளங்காமல் அரைகுறையாக விளங்கியவர்களிடம் எடுத்துச் சொல்வதற்கு கடும் போக்கை கையாளலாமா?
இஸ்லாம் என்பது சாந்தி, சமாதானம், அமைதி, கட்டுப்பாடு இவைகளை வலியுறுத்தும் மார்க்கம். இதற்காகவே இஸ்லாத்திற்கு வெளியிலுள்ளவர்களும் கூட ஆசைப்பட்டு ஈர்க்கப்பட்டு இதில் இணைய வருகின்றனர். இணைந்தும் வருகின்றனர். ஆனால், இதனை சிதைக்கும் விதமாகவும், குலைக்கும் விதமாகவும் சில மூடர்கள் அறிவிலிகள் நடந்து கொள்வதால் இஸ்லாத்திற்கே அவப்பெயர் ஏற்பட்டு விடுகின்றன. இஸ்லாமிய மார்க்கத்தின் மீதே வெறுப்பும், இஸ்லாமிய மக்கள் மீது மோசமான எண்ணமும் ஏற்பட்டு நாளடைவில் அது வளர்ந்து குரோதமாகவும், விரோதமாகவும் உருமாறி சமுதாய மக்களை கருவறுக்க வேண்டும் என்ற எண்ணம் தலைவிரித்தாடுகிறது.மேலும் படிக்க

No comments:

Post a Comment