இப்பூமியில் வாழக்கூடிய மக்கள் காலத்தை கணக்கிடுவதற்கு பல்வேறு மாதங்களையும் நாட்களையும் உண்டாக்கி வைத்துள்ளனர்.
ஜனவரியை துவக்கமாக கொண்ட ஆங்கில வருடபிறப்பு, சித்திரையை துவக்கமாக கொண்ட தமிழ்வருட பிறப்பு போன்று பலவருடபிறப்புகள் நடைமுறையில் உள்ளன.
நபி(ஸல்) அவர்களது ஹிஜ்ரத்தை அடிப்படையாக கொண்டு இஸ்லாமிய ஆண்டுகள் கணக்கிடப்படுகின்றன. அனைவரிடத்திலும் ஓராண்டுக்கு 12 மாதங்கள் என்ற அளவிலேயே கணக்கிடப்படுகின்றன.
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவு) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும். ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 9:36)மேலும் படிக்க
No comments:
Post a Comment