நபி(ஸல்) அவர்கள் தமது மக்கா வாழ்க்கையில் எண்ணிலடங்கா துன்பங்களைச் சுமந்த நிலையிலும் கூட அர்க்கம்(ரலி) அவர்களின் வீட்டை வணக்க வழிபாட்டிற்காகவும், கல்விக் கூடமாகவும் பயன்படுத்தியுள்ளார்கள்.
புனித மதீனாவில் நுழைந்த பதினைந்து நாட்களில் நஜ்ஜார் கிளையார்களால் வழங்கப்பட்ட இடத்தில் மஸ்ஜிதுந் நபவியை கட்டினார்கள். இணை வைத்தலின் சாயல் கூட இறைவழிபாட்டில் படிந்துவிடக் கூடாது என்பதற்காக, அந்த இடத்தில் புதைக்கப்பட்ட உடல்களில் மண்ணரிக்காத மீத பகுதிகளை தோண்டி அப்புறப்படுத்தினார்கள்.
மஸ்ஜிதுந் நபவியை எழுப்பும் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்ட நபி(ஸல்) அவர்கள் நபித்தோழர்களுடன் இணைந்து கற்களையும் மண்ணையும் சுமந்தார்கள்.மேலும் படிக்க
1 comment:
நல்லாட்சி மலர உழைத்திடுவோம்! ஆம்...
Post a Comment