துனீஷியா ஆப்பிரிக்க கண்டத்தின் வடக்கில் மத்திய தரைக்கடலை ஒட்டியுள்ள நாடு. 99% அரபு மொழி பேசும் முஸ்லிம்களை கொண்ட இந்நாடு 1 1/2 கோடி மக்கள் தொகையை கொண்டது. 1300 கி.மீ கடற்கரையை கொண்ட நீண்ட பாரம்பரிய செழுமை கொண்டது.
கி.பி 6ம் நூற்றாண்டில் பைசாந்தியர்களால் வெற்றிக் கொள்ளப்பட்ட இம்மண்ணில் 8ம் நூற்றாண்டில் அரேபியர்கள் நுழைந்தனர். இஸ்லாத்தை இருகரம் ஏற்று அரவணைத்த இம்மக்கள் அரபு மொழியையும் தமதாக்கி கொண்டனர். பின்னர் பல்வேறு ஏகாதிபத்திய கிறிஸ்துவ நாடுகள் துனீஷியா மீது படையெடுத்தன. இறுதியாக 1574ல் துருக்கி உதுமானிய பேரரசின் மன்னள் இரண்டாம் சலீம் லாகொலேட்டா, (La goleta) துனீஷ் ஆகிய இடங்களில் நடந்த மாபெரும் போரில் வெற்றி பெற்று துனீஷியாவை கைப்பற்றினார். உதுமானிய இஸ்லாமிய பேரரசின் ஓர் மாகாணமாக துனீஷியா இருந்து வந்தது.மேலும் படிக்க
No comments:
Post a Comment