வரலாறு படைத்த பலர் வரலாற்றில் காணமல் போனது உண்டு. புகழ் பெற்றவர்களையே வரலாற்றாசிரியர்களும் முன்னிறுத்துகிறார்கள். தியாகங்கள் செய்த நாயகர்கள், புகழ் வெளிச்சத்தில் தங்களை காட்டிக் கொள்ளாததாலேயே, பல நேரம் அவர்களது வரலாறுகளும் இருளில் மூழ்கிவிடுகிறது.
அந்த வகையில், ஆங்கிலெயரை எதிர்த்து சமரசமின்றி போராடிய மன்னர் சாந்தா சாஹிப் குறித்து தமிழக வரலாற்றாசிரியர்கள் விரிவாக எழுதவில்லை. ஆற்காடு நவாபாக திகழ வேண்டிய வாய்ப்பை இழந்தவர்தான் சாந்தா சாஹிப்! இவர் ஆற்காடு நவாபாக பதவி பெற்று வலுப்பெற்றிருந்தால் ஆங்கிலெய சாம்ராஜ்யம் தோன்றாமலேயே முடிந்து போயிருந்திருக்கக் கூடும்.
ஆற்காடு நவாபாக யார் இருப்பது என்ற பனிப்போரில் முகம்மது அலியும், சாந்தாசாஹியும் மோதினர். முகம்மது அலியோ ஆங்கிலெயர்களின் அடிமை மன்னராக இருப்பதில் பெருமை கொள்பவர். சாந்தா சாஹிப் அதற்கு நேர் எதிரானவர். ஆங்கிலெயர்களை எதிர்த்து மண்ணுரிமை போரை நடத்திய சமரசமற்ற போராளி!மேலும் படிக்க
No comments:
Post a Comment