அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவை ஒவ்வொரு தனி மனிதனின் தேட்டமாக ஒழுக்க மாண்புகளாகத் திகழ்ந்தாலும் உண் மையில் அவை மனித சமூக பொதுச் சொத்துதான். மனதால் எண்ணி மகிழ்வதற் குக் கூட இன்னொருவர் தேவைப்படுகிறார் எனும் போது அவை சமூகச் சொத்தாகவே கணக்கிடப்படுகின்றன.
அவைகளை பேணிக் காப்பது ஒட்டு மொத்த மனித சமூகத்தின் பொறுப்பாகும். தனிமனிதன் தன் அமைதியை கெடுத்துக் கொண்டால் உண்மையில் அவன் தன்னு டைய அமைதியை மட்டும் கெடுக்கவில்லை, பொது அமைதியையும் சேர்த்தே கெடுக்கின் றான். இதனால் அங்கே அரசாங்கத் தலையீடு அவசியமாகிறது. புகை பிடித்தல் என்பது தனிமனித உரிமை என்றாலும் பொது இடங்களில் புகைப்பதற்கு அரசாங்கம் தடைவிதிப்பதற்கு காரணமும் இதுதான்.
மேலும் படிக்க
No comments:
Post a Comment