கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாக் கத்தியை உருவிய அலெக்ஸ் என்ற அந்தப் பாதகன் ஷெர்பினியை கத்தியால் குத்தத் தொடங்கினான். ஒன்றல்ல, இரண்டல்ல… 18 முறை குத்தினான். ஹிஜாப் அணியும் உரிமைக்காகப் போராடிய அந்த வீரத்தாய் திறந்த நீதிமன்றதிலேயே நீதிபதி, சட்ட வல்லுனர்கள், அரசு அதிகாரிகள், தனது அருமை குழந்தை, கணவர் ஆகியோர் முன்னிலையில் துடிக்கத் துடிக்க ரத்தம் பீறிட்டுப்பாய கண் மூடினார்.
சீறி வரும் ஏவுகணைகளையும், பாய்ந்து தாக்கும் ராக்கெட்டுகளையும், மழையென குண்டுகளைப் பொழியும் போர் விமானங்களையும், பேட்டன் டாங்குகள் என அழைக்கப்படும் கவச வாகனங் களையும், கண்ணுக்குத் தென்படாத லேசர் ஆயுதங்க ளையும் கண்டு கூட இன்று ஏகாதிபத்திய சக்திகளுக்கு அச்சமில்லை. அதனை எதிர்கொள்ளும் வியூகம் பல வகுத்தாகி விட்டது.
எறிகணைகளை எதிரி நாடுகள் ஏவி விட்டால் அதனை வானிலேயயே வழி மறித்து அழிக்கும் வல் லமையும், சூட்சுமமும் தெரிந்த ஆதிக்க சக்திகளுக்கு நடுக்கத்தை வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கும் படுபயங்கர ஆயுதம் என்ன தெரியுமா-?
எம் தாய்மார்கள் அணியும் ஹிஜாப் என்னும் கவச உடைதான்.
மேலும் படிக்க
No comments:
Post a Comment