Sunday, February 27, 2011

அசிமானந்தா கழட்டிவிடப்பட்ட ஏஜென்ட்

சாலை ஓரத்தில், பேருந்தில், ரயில் பயணத்தில், கடை வீதியில் எங்காவது, தொப்பியும் தாடியும் வைத்துள்ள ஒரு முஸ்லிம் கையில் ஒரு மஞ்சள் பையுடன் காணப்பட்டால், “பையில் என்ன பாய் வெடிகுண்டா” என்று நக்கலடித்து கேட்பது ஒரு வழக்கமாக மாறிவிட்டிருந்தது. பத்திரிகையாளர் முதல் பொதுமக்கள் வரை முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்று சொல்லத் தொடங்கினர்.

பிச்சை எடுக்கும் முஸ்லிம் கூட இந்த அவசொல்லுக்கு ஆளாக நேர்ந்தது. தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் நண்பர்களாக சேர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் இந்து, ஒருவர் முஸ்லிம். இந்து பிச்சைக்காரர் முஸ்லிம் பிச்சைக்காரரை தீவிரவாதி என்று, வார்த்தையால் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். ஒருநாள் இந்த சுடு சொல்லால் சூடேறிய முஸ்லிம் பிச்சைக்காரர் கத்தியால் குத்த இந்து பிச்சைக்காரர் கொல்லப்பட்டார். ஊடகங்களும், அரசியல் சக்திகளும் தொடர்ந்து வலியுறுத்திய தீவிரவாதி என்ற பட்டப் பெயர் இரண்டு நண்பர்கள் இடையே பகையையும் ஒரு கொலையையும் உருவாக்கிவிட்டது. இதற்கு காரணமானவர்கள் வருத்தப்பட்டதில்லை. மேலும் படிக்க

No comments:

Post a Comment