இஸ்லாம் என்பது உலக நடைமுறை நெறியாகும். இஸ்லாம் மனித வாழ்வின் இலக்காக அல்லாஹ்வின் பொருத்தத்தையும் சொர்க்க வெற்றியையும் நிர்ணயித்த போதிலும் அந்த நம்பிக்கையின் பிரதிபலிப்பை இவ்வுலகில் காண நினைக்கிறது. எனவே இஸ்லாத்தின் கட்டளைகளுக்கு இணங்க, இவ்வுலக வாழ்வை தூய்மையானதாக
ஆக்கிக் கொள்வது ஒவ்வொரு மனிதன் மீதும் கடமையாகும்.
தன்னை சீர்திருத்துவது மட்டுமின்றி தான் வாழும் உலகை நெறிமுறைப்படுத்துவதும் தூய்மையாக்குவதும் நீதிமிக்க அரசை நிலை நாட்டுவதும் முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டமார்க்கக் கடமையாகும். மனித இனத்தை விட்டும் விலகி, காடுகளிலும் மலைகளிலும் குடில் அமைத்து மேற்கொள்ளும் துறவரம்தான் ஆன்மீகத்தின் அடையாளம் என்று கருதும் சித்தாந்தத்தை அடியோடு அப்புறப்படுத்தியது இஸ்லாம்.
மேலும் படிக்க
No comments:
Post a Comment