Monday, March 28, 2011

சமரசமற்ற போராளி சாந்தா சாஹிப்

வரலாறு படைத்த பலர் வரலாற்றில் காணமல் போனது உண்டு. புகழ் பெற்றவர்களையே வரலாற்றாசிரியர்களும் முன்னிறுத்துகிறார்கள். தியாகங்கள் செய்த நாயகர்கள், புகழ் வெளிச்சத்தில் தங்களை காட்டிக் கொள்ளாததாலேயே, பல நேரம் அவர்களது வரலாறுகளும் இருளில் மூழ்கிவிடுகிறது.
அந்த வகையில், ஆங்கிலெயரை எதிர்த்து சமரசமின்றி போராடிய மன்னர் சாந்தா சாஹிப் குறித்து தமிழக வரலாற்றாசிரியர்கள் விரிவாக எழுதவில்லை. ஆற்காடு நவாபாக திகழ வேண்டிய வாய்ப்பை இழந்தவர்தான் சாந்தா சாஹிப்! இவர் ஆற்காடு நவாபாக பதவி பெற்று வலுப்பெற்றிருந்தால் ஆங்கிலெய சாம்ராஜ்யம் தோன்றாமலேயே முடிந்து போயிருந்திருக்கக் கூடும்.
ஆற்காடு நவாபாக யார் இருப்பது என்ற பனிப்போரில் முகம்மது அலியும், சாந்தாசாஹியும் மோதினர். முகம்மது அலியோ ஆங்கிலெயர்களின் அடிமை மன்னராக இருப்பதில் பெருமை கொள்பவர். சாந்தா சாஹிப் அதற்கு நேர் எதிரானவர். ஆங்கிலெயர்களை எதிர்த்து மண்ணுரிமை போரை நடத்திய சமரசமற்ற போராளி!மேலும் படிக்க

Friday, March 25, 2011

கடனால் கலங்கும் நெஞ்சம் – 2

நபித்தோழர்களின் வரலாறு தரும் படிப்பினை
நபி(ஸல்) அவர்களின் அறிவுரைகள் மற்றும் வழிகாட்டல்கள் கண்டு செயற்பட்ட நபித்தோழர்கள் தங்களுடைய மரணத் தறுவாயிலும் கடன் குறித்து நடந்து கொண்ட முறை மிகச் சிறந்த படிப்பினையாகும்.
கலீபா உமர்(ரலி) அவர்கள் சுபுஹ் தொழுகையை நடத்திக் கொண்டிருக்கும்போது அபூலுஃலு என்பவன் உமர்(ரலி) அவர்களின் வயிற்றில் பிச்சுவாக் கத்தியால் பலமாக குத்தினான். கத்திக்குத்துக்கு ஆளான உமர் (ரலி) அவர்களின் நிலை மிகவும் மோசமாகியது…மேலும் படிக்க

Tuesday, March 22, 2011

பலஸ்தீனம்: கசிந்தது கள்ளத்தனம்

அரபு நாடுகளின் பிரச்சனைகளில் மையப் புள்ளியாக இருப்பது பாலஸ்தீனம் என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. மேற்குலகின் ஆதரவுடன் இஸ்ரேல் பாலஸ்தீனத்தை விழுங்கியுள்ளதாகவும், அரபு தலைவர்கள் முகத்தை திருப்பிக் கொண்டு வேறு பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதாகவும் அரபு மக்கள் உணர்கிறார்கள். இந்த சூழ்நிலையில் பாலஸ்தீனர்கள் மற்றும் அரபுகளின் மானசீக நகரமாகவும் புனித நகரங்களில் ஒன்றாகவும் நேசிக்கும் ஜெருசலத்தை இஸ்ரேலுக்கு விட்டுக் கொடுக்கும் முடிவு ஒன்று ரகசியமாக செய்து கொள்ளப்பட்டதென தகவல் வெளியானால் அந்த நம்பிக்கை துரோகம் எத்துனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.மேலும் படிக்க

படைத்தவனை நோக்கி …!

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனை காலைக் கதிரவன் எழுப்பினான். சில மணித் துளிகளில் வியாபாரமும் பணிகளும் அவனை விரைவாக அழைத்துச் சென்றன. இலாப, நஷ்ட கணக்குகளுடன் மாலையில் களைப்புடன் வீடு திரும்பியவன், தொலைக்காட்சியில் சற்றுப் பொழுதைப் போக்கி விட்டு உறங்கச் சென்றான். அவன் வாழ்வில் ஒரு நாள் விடைபெற்றது. இதுதான் பெரும்பாலானோரின் வாழ்க்கை. ஒரு முஸ்லிமின் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்குமா?! என்றால் நிச்சயமாக இல்லை.
தினமும் நடைபெறும் ஆன்மீக வியாபாரம்!
மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக் கொள்கின்றனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரி (ரலி), நூல்: முஸ்லிம் 381)மேலும் படிக்க

நல்லாட்சி மலர உழைத்திடுவோம்!

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனை காலைக் கதிரவன் எழுப்பினான். சில மணித் துளிகளில் வியாபாரமும் பணிகளும் அவனை விரைவாக அழைத்துச் சென்றன. இலாப, நஷ்ட கணக்குகளுடன் மாலையில் களைப்புடன் வீடு திரும்பியவன், தொலைக்காட்சியில் சற்றுப் பொழுதைப் போக்கி விட்டு உறங்கச் சென்றான். அவன் வாழ்வில் ஒரு நாள் விடைபெற்றது. இதுதான் பெரும்பாலானோரின் வாழ்க்கை. ஒரு முஸ்லிமின் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்குமா?! என்றால் நிச்சயமாக இல்லை.
தினமும் நடைபெறும் ஆன்மீக வியாபாரம்!
மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக் கொள்கின்றனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரி (ரலி), நூல்: முஸ்லிம் 381)மேலும் படிக்க

Sunday, March 20, 2011

நல்லாட்சி மலர உழைத்திடுவோம்!

நபி(ஸல்) அவர்கள் தமது மக்கா வாழ்க்கையில் எண்ணிலடங்கா துன்பங்களைச் சுமந்த நிலையிலும் கூட அர்க்கம்(ரலி) அவர்களின் வீட்டை வணக்க வழிபாட்டிற்காகவும், கல்விக் கூடமாகவும் பயன்படுத்தியுள்ளார்கள்.
புனித மதீனாவில் நுழைந்த பதினைந்து நாட்களில் நஜ்ஜார் கிளையார்களால் வழங்கப்பட்ட இடத்தில் மஸ்ஜிதுந் நபவியை கட்டினார்கள். இணை வைத்தலின் சாயல் கூட இறைவழிபாட்டில் படிந்துவிடக் கூடாது என்பதற்காக, அந்த இடத்தில் புதைக்கப்பட்ட உடல்களில் மண்ணரிக்காத மீத பகுதிகளை தோண்டி அப்புறப்படுத்தினார்கள்.
மஸ்ஜிதுந் நபவியை எழுப்பும் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்ட நபி(ஸல்) அவர்கள் நபித்தோழர்களுடன் இணைந்து கற்களையும் மண்ணையும் சுமந்தார்கள்.மேலும் படிக்க

Thursday, March 10, 2011

இந்த கொலைக்கு காரணம்

தில்லியில், நொய்டா பகுதியில், 2008ம் ஆண்டு, மே மாதம் 16ம் நாள் அரூசி தல்வார் என்ற 15 வயது சிறுமியும் அவளது வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ்-ம் அரூசியின் வீட்டில் கொல்லப்பட்டுக் கிடந்தனர். இந்த வழக்கில் தில்லி காவல்துறை முதல்கட்ட விசாரணை நடத்தியது. அரூசியின் அப்பா ராஜேஷ் தல்வார் தான் கொலையாளி என்றும், கொல்லப்படும் முன்பு அரூசி கற்பழிக்கப்பட்டுள்ளார் என்றும் காவல்துறை சொன்னது. காவல்துறையின் இந்த அறிக்கை தில்லியில் பெரும் பரபரப்பை உண்டு பண்ணியது. பத்திரிக்கையாளர் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் காவல்துறை மீது அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து 2008, மே 31ல் இந்த வழக்கு சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.மேலும் படிக்க